கோட்டையை நோக்கி அரசு ஊழியர்கள் பேரணி!

சென்னையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என்று அனைவரும் இணைந்து மெரினாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ’வின் பேரணி இன்று சென்னையின் மெரினா கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பல ஊர்களிலிருந்து ஆசிரியர்கள் கலந்து கொள்ள வருகை தருகின்றனர். ஏற்கனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்றும் அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களின் 73 சங்கங்கள் இணைந்து ஜாக்டோ – ஜியோ’வின் கூட்டமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ – ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த போராடத்தில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து வேன், பஸ் என்று ஆசிரியகள் வருகின்றனர். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பேச வேண்டும். அப்படியில்லை என்றால் ஏற்கனவே அறிவித்தபடி வரும் 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் நடக்கும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் 26 மற்றும் 27ம் தேதிகளில் மாவட்ட அளவில் வேலை நிறுத்த மாநாடுகள் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக அடுத்த மாதம் 7ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று திட்டமிட்டுள்ளதாக அரசு ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top