உலகில் முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த அமெரிக்க ஆண்

transpreg

டிரிஸ்டன் ரீஸ், திருநங்கை ஆண் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஜூலை 14-ஆம் தேதி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு லியோ முர்ரே சாப்லோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாது என கூறியிருந்தால், தற்போது திருநங்கை ஆணுக்கு ஒரு குழந்தை உள்ளது என கொண்டாடும் வகையில் குழந்தை புகைப்படத்துடன் டிரிஸ்டன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிப் சாப்லோ தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் சோரோனிக்ளிங் (chronicling) முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

முன்னதாகவே, ஓரினச் சேர்க்கையாளர்களான டிரிஸ்டன்,பிப் சாப்லோ தம்பதி, ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

trans

குழந்தை லியோ மற்றும் ரீஸ் நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிப் சாப்லோ தம்பதிகள் இது குறித்து கூறுகையில் ” நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எங்கள் வாழ்க்கையில் இவன் கிடைத்திருப்பதற்க்கு அது மட்டும் இன்றி அவன் எப்படியாக வளரப்போகிறான் என்பதை பார்க்க காத்து இருக்க முடியவில்லை” என்று கூறினார்கள்.

ஓரினச் சேர்க்கையாளர்களான ரீஸ் , சாப்லோ தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் ஆதரவு உருவாகியுள்ளது அது மட்டும் இன்றி உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து பெரும் வைரலாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top