விவசாயிகளின் தற்கொலையை, தண்ணீர் பிரச்னை மற்றும் வறட்சியுடன் இணைக்கவேண்டாம்; உச்ச நீதிமன்றம்

 

droughtfarmers1

தமிழக பொது நல வழக்காடு மன்றம் சார்பில் விவசாயிகள் தற்கொலையை தடுக்கக்கோரி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் தீபக்மிஷ்ரா, ஏ.எம். கன்வில்கர் அமர்வு விவசாயிகளின் தற்கொலையை,  தண்ணீர் பிரச்னை மற்றும்  வறட்சியுடன் இணைக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கர நாராயணன்,  தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணத்தை படித்துபார்த்து வாதிட, அவகாசம் தேவைப்படுவதால், விசாரணையை 2 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் நரசிம்மாவும், விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் தற்கொலையை,  தண்ணீர் பிரச்னை மற்றும்  வறட்சியுடன் இணைக்கவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top