தமிழக அமைச்சர்களை மிரட்டி பாஜக காரியம் சாதிக்கிறது: திருநாவுக்கரசர்

201605050226439622_Congress-leader-faints-during-poll-campaign_SECVPF (1)

 

தமிழக அமைச்சர்களை மிரட்டி மத்தியில் உள்ள பாஜக அரசு தனது காரியத்தை சாதிக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

 

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவில் தற்போது தெளிவற்ற நிலை உள்ளது. இதனால்தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற அதிமுகவை பயன்படுத்துகிறது.

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்த அதிமுக, அப்போதே நீட் தேர்வு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து நிறைவேற்றி இருக்கலாம். தமிழக அரசை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அமைச்சர்களை மிரட்டி பாஜக தனது காரியத்தை சாதிக்கிறது.

 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கர்நாடகாவில் வருமான வரி சோதனை நடத்தியவர்கள், தமிழக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்கியபோது ஏன் நடத்தவில்லை என்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top