விளையாட்டுத்துறை அர்ஜூனா விருது: தமிழக வீரர் மாரியப்பன் பெயர் பரிந்துரை

 

201708031547599129_Paralympian-Jhajharia-Sardar-Singh-recommended-for-Khel_SECVPF

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தப்படும்.

அதன்படி இந்த வருடத்திற்கான விருதுகளுக்கு தகுதிவாய்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.கே. தக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்று அர்ஜூனா விருதுக்கு 17 பேரை பரிந்துரை செய்துள்ளது.

இதில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் (எஃப் 46) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார். இதனால் இவரது பெயர் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள 17 பேர் கொண்ட வீரர்கள்- வீராங்கனைகள் விவரம்:-

1. வி.ஜே. சுரேகா (வில்லித்தை), 2. குஷ்பிர் கவுர் (தடகளம்), 3. அரோகின் ராஜீவ் (தடகளம்), 4. பிரசாந்தி சிங் (கூடைப்பந்து), 5. எல். தேவேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை). 6. புஜாரா (கிரிக்கெட்). 7. ஹர்மன்ப்ரீத் கவுர் (கிரிக்கெட்), 8. ஆயினம் பெம்பெம் தேவி (கால்பந்து). 9. எஸ்.எஸ்.பி. சவ்ராசியா (கோல்ஃப்). 10. எஸ்.வி. சுனில் (ஹாக்கி). 11. ஜேஸ்விர் சிங் (கபடி). 12. பி.என். பிரகாஷ் (துப்பாக்கி சுடுதல்). 13. ஏ. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்), 14. சாஹேத் மைனேனி (டென்னிஸ்), 15. சத்யவார்த் கடியன் (மல்யுத்தம்), 16. மாரியப்பன் தங்கவேலு (பாராலிம்பிக்). 17. வருண் பதி (பாராலிம்பிக்)

விளையாட்டுத்துறையின் உயர் விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பாராலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் ஜகாரியா, ஹாக்கி வீரரான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top