உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க நடக்கும் உண்ணாவிரதத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

 

56

 

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி ”உயர்நீதிமன்றத்தில் தமிழ்-போராட்டக் குழு” சார்பில் மதுரை காளவாசலில் ஜூலை 27ம் தேதி முதல் 9  பேர் தொடர்ந்து காலவரையறையற்ற பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.  இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தை சேர்ந்த  மெய்யப்பன் பங்கெடுத்துவருகிறார்.

 

8ஆம் நாளாக நடைபெற்று வரும் இந்த பட்டினிப்போராட்டத்தினில்  மெய்யப்பன்    உடல் நிலை இன்று மோசமடைந்ததால்        மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில்  

 

“8ஆம் நாளாக நடைபெற்று வரும் இந்த பட்டினிப்போராட்டத்தினில் தோழர் மெய்யப்பன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த 9 தோழர்களும் தமிழ் உரிமையைக் காக்கவும், ஏழை எளிய மக்களின் வழக்காடு நலனுக்காகவும் இந்த போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

 

இந்த கோரிக்கையினை கடத்திச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. தாய் மொழியில் வாதாடும் உரிமையை கேட்பதற்கே உயிரை பணயம் வைத்து போராட வேண்டும் என்ற நிலைக்கு நம்மை தள்ளியிருக்கிறது இந்திய அரசு.

 

தமிழே வழக்காடு மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி என்ற கோரிக்கையினை பெருந்திரள் கோரிக்கையாக மாற்றுவது அனைவரின் கடமை.

 

மதுரை காளவாசல் போராட்டக் களத்தினில் திரண்டு போராட்டத்தினை வலுப்படுத்தவும், தமிழகம் முழுதும் இந்த கோரிக்கையினை பரவச் செய்திடவும் வேண்டும் என மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.”

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top