‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தரவில்லை: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ji ramakrishnan

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெற, மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செய லர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, தமிழகம் முழுவதும் பல காட்சிகள் மற்றும் இயக்கங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. அப்போராட்டத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் தொடங்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்தார்.

இந்த போராட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொருளாளர் ஹாரூன்ரசீக், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், தென்சென்னை மாவட்டத் தலைவர் தீ.சந்துரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில், முது நிலை மருத்துவப் படிப்பில் தமிழக மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 85 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அது 85 சதவீதமாகத் தொடர வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற் றப்பட்டது. மேலும் மருத்துவ மாண வர் சேர்க்கையில் நீட் தேர்விலி ருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மசோதா நிறைவேற்றப் பட்டது. இந்த இரு மசோதாக் களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்க வில்லை.

மேற்கூறிய இரு மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் நேற்று 5 லட்சம் மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் அனைவரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, மாநில பாடப்பிரி வில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அர சாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில், மாநில பாடப் பிரிவில் படித்த 5 சதவீத மாண வர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி கிடைக்கக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது.

மாநில அரசைப் பொறுத்த வரையில், சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட இரு மசோதாக் களுக்கு ஒப்புதல் பெற, அவர்கள் போதுமான அழுத்தம் கொடுக்க வில்லை. இனிமேலாவது தமிழக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்பு தலைப்பெற்று, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top