திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

இரண்டு தினங்களாக ரேசன் கடைகளில் அமல்படுத்தபடும் புது விதிகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருகின்றன. இதில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டு கடந்த 7 0 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரேசன் கடை மூடுவது தொடர்பாக சென்ற 2016 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி மிக வேகமாக பரவி வருகிறது.

2016  மே  6 ஆம்தேதி நடந்த போராட்டம்

2016 மே 6 ஆம்தேதி நடந்த போராட்டம்

 

அது மட்டும் இல்லாமல் 2016 ஏப்ரல் முதல் இன்று வரை மே பதினேழு இயக்கம் தொடர்ச்சியாக ரேசன் கடை குறித்து மக்களிடம் பிராச்சரமும் செய்து வருகிறது. ரேசன் கடைகளை மூடப் போகிறார்கள் என்று 2016 ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து சொன்னது பத்திரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.மீண்டும் மே மாதம் 4 ஆம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள்’

 

WTO’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை எதிர்த்து மே, 6 ந்தேதி 2016 அன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறக் கோரி தோழமை அமைப்புகளையும் அழைத்து மே 7, ந்தேதி 2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ரேசன் கடைகள் மூடும் ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தி சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை பிரச்சாரங்கள் மேற்கொண்டனர்

 

மே 6 2016 நடத்திய போராட்டதிற்கான வழக்கின் FIR

மே 6 2016 நடத்திய போராட்டதிற்கான வழக்கின் FIR

மூடப்படும் ரேசன் கடைகள் என்ற பெயரில் WTO ஒப்பந்தத்தினைப் பற்றி விளக்கும் புத்தகத்தினைக் கொண்டு வந்தார்கள் அது குறித்த கருத்தரங்கினை சென்னை, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் நடத்தினார்கள் . ஊடக விவாதங்களில் இதைப் பற்றி பாஜக-வினரிடம் கேள்வி கேட்டார்கள் மே பதினேழு இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் காணொளி பெருமளவில் சமூக வலைதளங்களில் பரவி, இது விவாதப் பொருளாக்கப்பட்ட போது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அப்படி எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என பொய் சொன்னார்.

தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் “Direct Benefit Transfer” என்று சொல்லக் கூடிய மானியத்தை நேரடியாக பெறுவதற்கான படிவத்தை மக்களிடம் என்னவென்றே சொல்லாமல் விநியோகித்து கையெழுத்து பெற்றதை அம்பலப்படுத்தினர் மேலும், திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் என்பது இந்த திட்டத்தை மக்களிடம் அம்பல படுத்தியதால் தான் என்று தற்பொழுது மிக தெளிவாக தெரிகிறது.

 

2017  எப்ரலில் வெளியிட்ட புத்தகம்

2017 எப்ரலில் வெளியிட்ட புத்தகம்

ஏன் என்றால் இனப்படுகொலைக்கான நினைவேந்தலில் கைது செய்யப் பட்டாலும் அவர் மீது ஏற்கனவே இருப்பதாக சொல்லி குண்டர் தடுப்பு சட்டம் போட்ட போது காவல் துறை காட்டிய வழக்குகளில் முக்கியமான மத்திய அரசின் பண மதிப்பிழப்பை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், போன வருடம் மே 6 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு wto வில் கையெழுத்து போட்டதை கண்டித்து கருப்பு கொடி காட்டிய வழக்கும் மிக முக்கியமான வழக்காக உள்ளது இந்த வழக்குக்காக தான் சைதை நீதி மன்றத்து .அவர் அழைத்து வரப்பட்டு ஆஜார் படுத்தப் பட்டார்.

திருமுருகன் காந்தி மத்திய அமைச்சர் நீர்மலா சீத்தாராமனின் பொய்களை தொடர்ந்து அம்பல படுத்தியதும். தொடர்ச்சியாக இந்திய அரசு ரேசன் கடைகளை மூடப் போவதை அம்மபலப்படுத்தி கண்டித்து போராட்டங்கள் நடத்தியதுதான் அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான காரணம் என்பது மிக தெளிவாக தெரிந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. நல்லகருத்துக்கள்

Your email address will not be published.

Scroll To Top