மத்திய அரசு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யக் கூடாது: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

gas_4

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை உடனே கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: மக்களுக்குஅளிக் கப்படும் அனைத்து சேவைகளுக்குமே வரி உண்டு. எதற்கும் மானியங்கள் இல்லை, இருக்கின்ற மானியங்களையும் ஒழிப்போம் என்று மத்திய அரசு செயல்படுகி றது. மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் ஆட்சியாளர்களே தவிர, மக்களை வதைத்து வாட்டுவதற்காக அல்ல என்பதை மத்திய அரசு உணர வேண்டும். சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும், மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: நாடாளுமன்றத் தில் 300-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக, மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டது. அந்த வகையில், சமையல் எரிவாயு மானியத்தை அடியோடு ஒழிக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் சமையல் எரிவாயுவுக்கான மானி யம் அடியோடு ரத்து செய்யப் படும் என்றும் மத்திய அரசு அறி வித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எரிவாயு மானியம் ரத்து செய்யப் படாது என்று மக்களுக்கு வாக் குறுதி அளித்துவிட்டு, அதைக் காப் பாற்றாமல் மானியத்தை ரத்து செய்வது மக்களுக்கு இழைக்கப் படும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். எனவே, இம்முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: உலக வர்த்தக அமைப்பில் மக்களின் நலனுக்கு விரோதமான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அதன் அடிப்படையில், அனைத்து மானியங்களையும் ரத்து செய்து வருகிறது. இதனால் சாமானிய மக்களும், மாத வருமானப்பிரிவினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக மத்திய அமைச்சர் நேற்று அளித்த விளக்கம் அந்தச் செய்தியை மறுப்பதாக இல்லை. முறைப்படுத்தப் போகிறோம் என அவர் கூறினாலும், படிப்படியாக மானியம் ரத்து செய்யப்படும் என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழக அரசு இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசிய தேவைகளுக்கு மானியம் வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே, சிலிண்டரை மானிய விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும். மாதந்தோறும் சிலிண்டருக்கான விலையை உயர்த்தக் கூடாது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: அனைத்து மானியத்தையும் முழு வதுமாக ஒழிப்பதுதான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது. அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும், எரிவாயு சிலிண்டருக் கான மானிய ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top