தணிக்கையில் ‘யு/ஏ’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது ‘விவேகம்’

viv

தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி ‘விவேகம்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். தணிக்கை முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. தணிக்கை குழு ‘விவேகம்’ படத்தைப் பார்த்துவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுக்கவே, தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இதர படங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top