அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற புதின் உத்தரவு

Putin

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பது தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் மசோதா கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு வெள்ளிக்கிழமையே எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதிபர் புதின் இதனை தற்போதுதான் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை தரப்பில், “அமெரிக்க தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 455-ஆக குறைக்கும்படி அமெரிக்காவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, “நிலைமை மாறும் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை”

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் குறித்த ரஷ்யாவின் பதிலடி குறித்து கூறுகையில், ”அமெரிக்காவிடமிருந்து உரிய பதில் கிடைக்காமல் இதனை விட்டுவிட போவதில்லை. அதற்கான சரியான நேரமும் இதுதான்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top