“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்

str

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து `ஏஏஏ’ படத்தின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று செய்திகளும் வரத் தொடங்கியது. ஆனால் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குநர் இரண்டாவது பாகம் உருவாகும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

இதற்கிடையே சிம்பு தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தின் பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாகவும், ‘பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின.

இதையடுத்து நடிகர் சிம்பு, இம்மாதிரியான செய்திகளை பரப்ப வேண்டாம் தன்னிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும்வரை காத்துருக்கவும் என்று ஊடகத்திற்கும், தனது ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவரது அடுத்த படம் குறித்த தகவலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன்.டி.ஆர். படம். 7 முறை விழுந்து விட்டேன், 8-வதாக எழுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றுமொரு டுவிட்டில், “அந்த படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது, இடைவேளை கிடையாது, எனவே கழிவறையை முன்பே பயன்படுத்தி விடுங்கள். படம் ஆரம்பிக்கும் முன்னரே டிரிங்ஸ், பாப்கார்னை வாங்கிவிடுங்கள், பார்க்காததை பார்க்கப்போகிறீர்கள். இந்த செப்டம்பர் 2017-ல் படம் ரிலீசாகும்”.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top