5வது நாளாக காலவரையற்ற காலவரையற்ற

உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை வக்கீல்கள் 9 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 27 ஆம் தேதி துவங்கினர் . இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர் பகத்சிங் தலைமை தாங்கினார்மதுரை காளவாசல் சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

20526027_1439615279464967_1376322703310715732_n
வக்கீல்களின் கோரிக்கை நியாயமானது என்பதால், மதுரை உயர்நீதிமன்ற கிளை இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்ததுடன், காவல்துறை பாதுகாப்பும் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவரவரின் தாய்மொழியில் வழக்குகளை அறிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும்  இந்த கோரிக்கை நியாயமானது. ஆகையால் இந்தப் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்க வேண்டும்.  என்ரு  பேசினார் .

இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்றோடு 5 வது நாளாக தொடர்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top