வங்கியில் கள்ள நோட்டுகள்!

ஈரோடு மாவட்டத்தில், வங்கியில் வழங்கப்பட்ட பணத்தில் கள்ளநோட்டுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கடந்த 20ம் தேதி குப்புசாமி என்ற வாடிக்கையாளர் சென்றுள்ளார். வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாயை பெற்றவர், 50 ஆயிரம் ரூபாயை வேறு ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அப்போது, 6 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டுகள் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வேறொரு வாடிக்கையாளருக்கும் கள்ளநோட்டு வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கி மேலாளர் உரிய பதில் அளிக்காததால் ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பி உள்ளனர். வங்கியில் கள்ள நோட்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top