கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி வெளியேறக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேறக் கோரி கதிராமங்கலத்தில் ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

dre

கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று, கதிராமங்கலம் அருகே வனத்துர்கை அம்மன் கோவில் அருகே ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் எழுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரைக் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேறக் கோரியும், பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை விடுதலை செய்யக்கோரியும் கதிராமங்கலத்தில் ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top