சிவா கார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தின் இசை வெளியீடு

nayan

சிவா கார்த்திகேயன் நடிக்கவிருக்கும் வேலைக்காரன் படத்தின் இசை வெளியீடு குறித்து நேற்று சிவா கார்த்திகேயன் அவர் ரசிகர்களுடன் twiiter பக்கத்தில் உரையாடிய பொது வேலைக்காரன் படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் மாதம் வெளிவரலாம் என்று கூறியுள்ளார்.

முதன் முறையாக நயன்தாரா சிவா கார்த்திகேயன் இணைந்து நடிக்கவிருக்கும் வேலைக்காரன் படத்தை “தனி ஒருவன்” என்னும் பெரும் வெற்றி படத்தை கொடுத்த “மோகன் ராஜா” தான் இந்த படத்தையும் இயக்க இருக்கிறார், ஆதலால் வேலைக்காரன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்ச்சியாக படங்களுக்கு பாடல் அமைத்து வரும் அனிருத், விவேகம் படத்தின் மூன்று பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் இப்படத்தின் அணைத்து பாடல்களும் இந்த வரம் வெளிவர உள்ளது. இது மட்டும் இன்றி தானா சேர்ந்த கூட்டம் படத்தின் single track நானா தானா வீனா போனா பாடல் இன்று (27.07.2017) வெளியாகிறது. இப்படி சற்று பிஸியாக உள்ள அனிருத் வேலைக்காரன் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ள SONY நிறுவனம் தனது TWITTER பக்கத்தில் கூறியதாவது “இது அதிகாரப்பூர்வ தகவல், வேலைக்காரன் படத்திற்காக 24 AM STUDIOS உடன் மீண்டும் இணைவது பெருமிதம்” என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top