மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக   துண்டறிக்கை  குடுத்த காரணமாக   கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடபட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே கடந்த 12-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோ கம் செய்த மாணவி வளர்மதியை (23) போலீஸார் கைது செய்தனர். வீராணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த வளர்மதி பெரி யார் பல்கலைக்கழகத்தில் இதழி யல் முதலாமாண்டு படிக்கிறார்.

அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருந்த நிலையில், சேலம் மாநகர போலீஸார் வளர்ம தியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். தற்போது கோவை மத் திய சிறையில் வளர்மதி உள்ளார். இதனிடையே, அவரை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு  சமுக ஊடகங்களில்   பொதுமக்கள்  மிக  பெரிய அளவில்   எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top