ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்கள் தன்னாட்சியுரிமையைப் பெறுவதற்குத் தமது அரசாங்கமும், மக்களும் முழுமையான ஆதரவை நல்குவதாக ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்காயி (Khasro Ajgayi) அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் அறிமுக நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை  அரசும், குர்து மக்களுக்கு எதிராக ஈராக் அரசும் இன அழிப்பைப் புரிந்துள்ளன.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையை, இனப்படுகொலைக்கு  உள்ளாக்கப்பட்ட  மக்கள் என்ற வகையில் குர்து மக்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அதேநேரத்தில் எவ்வாறு குர்து மக்கள் தன்னாட்சியுரிமைக்கு  உரிமையுடையவர்களோ, அவ்வாறே ஈழத்தமிழர்களும் தன்னாட்சியுரிமைக்கு உரிமையுடைவர்கள். எனவே ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையை குர்து மாநில அரசாங்கம் ஆதரிக்கின்றது’ என்றார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top