நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு

 

mk-sTALIN

 

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலையில் (வியாழக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்,  வரும் 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் மாணவி வளர்மதி மற்றும் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வலியுறுத்தியும்  தீர்மானம்   நிறைவேற்றபட்டது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முதன்மை செயலாளர் துரை முருகன், துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி உள்பட தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

stalin
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு  எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, மேலும் தற்போதைய அரசியல் நிலவரங்கள், கட்சி பணிகள் பற்றியும் விவாதித்தனர்.

 

தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் ஈவு இரக்கமற்ற முறையில் விபரீத விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கும் மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு “விதிவிலக்கு” அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற 27-7-2017, வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை” அறவழியில் அமைதியான முறையில் நடத்துவது என்று இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

 

இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும், சமுதாய அமைப்புகளும், மாணவ- மாணவியரும் பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழகத்தின் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாணவி வளர்மதி மற்றும் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம்   நிறைவேற்றபட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top