100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள் தொடங்கிய போராட்டம் 100வது நாள் எட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணி நடைப்பெற்று வருகின்றன.

இதையடுத்து, இந்த திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி நெடுவாசல் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

கிரிக்கெட்டில் சதம் அடித்தால் அந்த வீரருக்கு பரிசும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க 100 வது நாளாக போராடியும் அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top