தனி மனித சுதந்திரத்தை பறித்து வேறு எதையும் உரிமையாக கொடுக்க முடியாது: நீதிபதி பாப்டே

201707191343145091_Judges-Comment-Aadhar-case-Individual-human-freedom-snatch_SECVPF

 

தனி மனித சுதந்திரத்தை பறித்து வேறு எதையும் உரிமையாக கொடுக்க முடியாது என்று ஆதார் வழக்கில் நீதிபதி பாப்டே கருத்து தெவித்தார்.

 

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது.

 

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இத்திட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனி நபர் சுதந்திரத்தை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதற்கு முன்பு தனிநபர் சுதந்திரம் குறித்து 8 நீதிபதிகள் வரை அடங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இதனால் இதுகுறித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அப்துல்நசீர் ஆகிய 5 நீதிபதி அமர்வு நேற்று கூடி விசாரணை நடத்தியது.

 

இதன் முடிவில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா? இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா? என்பது குறித்து தலைமை நீதிபதி தலைமையில் 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

 

ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான, தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பதை 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை விசாரணையை தொடங்கியது.

 

இந்த விசாரணையின் போது தனிமனித சுதந்திரத்தை பறித்து வேறு எதையும் உரிமையாக அளிப்பதால் எந்த பலனும் இல்லை என்று நீதிபதி பாப்டே கருத்து தெவித்தார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top