எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

 

etappaadi

 

பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது

 

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது.

 

இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும்.

 

எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது.

 

முதல்வர் பழனிச்சாமியின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன..

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top