முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிலத்துக்கு சட்டத்தை மீறி வழங்கப்பட்ட மின் இணைப்பு; துண்டிக்க வழக்கு

 

theni

 

தேனி மாவட்டம்  லெட்சுமிபுரத்தில் முன்னாள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலத்துக்கு வழங்கப்பட்ட விவசாய மின் இணைப்பை துண்டிக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி, உயர் நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த மனு: லெட் சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு தோண்டப்பட்டது. இதனால் ஊராட்சி கிணற்றில் தண்ணீர் வற்றி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

 

ஓபிஎஸ் மனைவி நிலத்தில் உள்ள கிணற்றில் 15 எச்பி, 20 எச்பி திறன் கொண்ட மோட்டார் பொருத்தி ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டுச் செல்லப்படுகிறது.

 

மின்வாரிய விதிமுறைப்படி ஆற்றின் கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள விளை நிலங்களுக்குத்தான் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் வரட்டாறு கரையில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ள விஜயலெட்சுமியின் நிலத்துக்கு விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேனி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆக.1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top