ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி கதிராமங்கலத்தில் இருவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

 

IMG1

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஓஎன்ஜிசி குழாயில் எண்ணெய் கசிவை சரி செய்வதற்கும், ஓஎன்ஜிசி யை  தடுப்பதற்கும் அரசு அதிகாரிகள் போதிய கவனம் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகமும் மக்களை பற்றி கவலைபடாமல்  ஓஎன்ஜிசிக்கு சாதகமாகவே நடந்துகொண்டது. .இந்த நிலையில் , மக்கள் போராட்டம் வலுபெறவே அரசு அதிகாரிகளை ஊருக்குள் வரவிடாமல் மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதி கலவர பகுதியாக மாறியது.

 

IMG-6315

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் திருச்சி மத்திய சிறைக் காவலில் அடைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் கைதானவர்கள் 10 பேர் ஜாமீன் வேண்டும் என்று கோரி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது

 

கதிராமங்கலத்தில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. 10 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

kathira

‘’நீதித்துறையும் மக்கள் பக்கம் நிற்காமல் ஆளும் வர்க்கம் சார்ந்து நீதியை வழங்குகிறது, நீதிபதிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் இந்த மாதிரி  நேரத்தில் அரசுக்கு அறிவுரை செய்யும் இடத்தில் நீதித்துறை இருக்கவேண்டும் மாறாக அரசின் குரலாக நீதித்துறை இருப்பது மக்கள் விரோதமாக போய்விடும்’’ என்று ஜாமீன் மறுப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்

 

.இந்த நிலையில் என்ன செய்வது யாரை நம்புவது என்று அறியாமல் கதிராமங்கலம் மக்கள் நேற்று உண்ணா விரதம் இருந்து தங்கள் வலியை இந்த அரசுக்கு தெரிவித்தார்கள்.தொடர்ந்து முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்  ராமமூர்த்தியும்  விவசாயி ராஜாராமனும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்து  .ஈழத்தில் திலீபன் தண்ணீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தது போல் இருவரும் தண்ணீர் கூட அருந்தாமல் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.இன்று மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு இப்படியே நிலைமை நீடித்தால் இவர்களுக்கு கிட்னி பழுதடைந்துவிடும்.உடனே கொஞ்சம் தண்ணீர் குடிக்க கொடுங்கள் என்றார்கள் ,ஆனால் உண்ணாவிரதம் இருக்கும் போராளிகள் தண்ணீர் குடிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.ஊரே பரபரப்பாக இருக்கிறது. இதுகுறித்து போராடும் பெண்கள் கூறியதாவது நாங்கள் என்ன புதிய நிலத்தையா கேட்கிறோம் எங்களது நிலத்தை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் அதை கார்பிரெட் காரர்களுக்கு கொடுத்து சீரழித்து விடாதீர்கள்,இவர்கள் இரண்டு உயிருக்கும் ஏதாவது நடந்து விட்டால் பிறகு இந்த ஊரே உண்ணாவிரதம் இருக்கும்.இந்த அரசு செய்வதை செய்யட்டும் என உணர்ச்சிபொங்க பேசுகிறார்கள். இந்த விசயத்தில் அரசு மெத்தனமாக இருப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்

 

இது குறித்த தகவல் அறிந்த திருவிடைமருதூர் தாசில்தார் கணேஷ்வரன்,வருவாய் ஆய்வாளர் விவேகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top