மொரீஷியஸ் நாட்டில் திரைப்படம் எடுத்தால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்:மொரீஷியஸ் திரைப்படத் துறை

 

marseille_2_MK_BLOG

மொரீஷியஸ் நாட்டில் திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்று திரைப்பட துறை வாரிய தலைமை அதிகாரி நந்தா தெரிவித்தார்

 

மொரீஷியஸ் நாட்டில் திரைப்பட தொழில் வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு, அங்குள்ள வாய்ப்புகள், சலுகைகள், திரைப்படம் தயாரிப்பது, விசா பெறுவது தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசினர்.

 

அவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, மொரீஷியஸ் நாட்டின் முதலீட்டு வாரிய திரைப்பட துறை தலைமை அதிகாரி நந்தா பேசினார்

9835_Villa Moretic New 034

திரைப்படத் துறைக்கென மொரீஷியஸ் நாட்டில் தனி கொள்கை அமைத்து செயல்படுத்தி வருகிறோம். உள்ளூர் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், சிறந்த திரைப்பட தயாரிப்பு தளமாக மொரீஷியஸ் இருக்கிறது என்பதை உலக அளவில் கொண்டு சேர்க்கவும் இந்தக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். அதற்காகவே, திரைப்பட தொழில் சார்ந்த தொழில்நுட்பங்கள், படப்படிப்பு தளங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

 

மேலும், எங்கள் நாட்டுக்கு படம் பிடிக்க வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். படத் தயாரிப்பில் ஆரம்பம் முதல் இறுதி வரையான அனைத்துப் பணிகளையும் மொரீஷியஸில் மேற்கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். மொரீஷியஸில் படம் எடுக்க விரும்புபவர்கள், எங்களை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 48 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

 

திரைப்படம் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி நிகழ்சிகள், தொடர்கள், ஆவணப் படங்கள், மற்றும் பிரத்யேக பாடல் காட்சிகள் எடுப்பது போன்றவற்றுக்கும் தேவையான வசதிகளை செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் இருந்து எங்கள் நாட்டுக்கு வந்து திரைப்பட காட்சிகளை எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா, ஜெர்மனி, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரையுலகினர் வருகின்றனர்.

shutterstock_236179030-1-a

இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் நாட்டில் 60 திரைப்படங்கள் எடுக்க பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் இருந்து மட்டும் 20 படங்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளன. திரைத்துறையினர் எங்கள் நாட்டுக்கு வந்து படம் எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், அங்கு நடக்கும் படப்பிடிப்புக்கான செலவில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி கடந்த ஆண்டில் 30 சதவீத தொகை திருப்பி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 40 சதவீத தொகையை திருப்பி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த சலுகை திரைப்படத் துறை சார்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொகையானது ஒட்டுமொத்த திரைப்படத்துக்கான தயாரிப்பு பணிகள் முடிந்து பிறகு அதிகபட்சமாக 6 அல்லது 7 வாரங்களில் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top