கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி

 

raffic-ramasamy43

கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சசிபெருமாள் பாணியில் தற்கொலை முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பாரீஸில் உள்ள குறளகம் அருகில் உள்ள கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

 

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் காமராஜ் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும், என்று வலியுறுத்தினார்.

 

அவரை சமாதானம் படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் டிராபிக் ராமசாமி தனது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பிடிவாதமாக இருந்தார்.. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி செல்போன் கோபுரத்தில் ஏறி உயிர் மாய்த்த சசி பெருமாள் போல்  ஒரு போராட்டத்தை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top