நீலகிரியில் ஜி.எஸ்.டி. வரி பாதிப்பால் 150 தேயிலை தொழிற்சாலைகள் மூடல்

2_after-GST-150-tea-

 

தேயிலை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளில் அதிக தேயிலை தேக்கம் அடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை தொழிற்சாலைகள் இன்று முதல் மூடப்பட்டன

 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது தேயிலை ஏல மையம். இங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஏலம் நடப்பது வழக்கம்.
ஏலத்தில் ஏராளமான உற்பத்தியாளர்கள், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் கலந்து கொள்வார்கள்.
tea

இங்கு வாங்கப்படும் தேயிலை தூள்கள் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமல்லாது பாகிஸ்தான், ஈரான், ஈராக் ஆகிய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு தேயிலைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
நேற்று குன்னூர் ஏல மையத்திற்கு 20 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலை வந்தது. இதில் 9 லட்சத்து 29 ஆயிரம் கிலோ மட்டுமே ஏலம் போனது. தேயிலை ஒரு கிலோ ரூ.71-க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஏலத்தில் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஏல மையத்தில் தேயிலை தேங்கியுள்ளது.

ஏல மையத்திற்கு தேயிலையை அனுப்ப முடியாததால் குடோன்களில் தேயிலை மற்றும் தூள்கள் குவிக்கப்பட்டுள்ளது. பறிக்கப்படும் தேயிலை தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்காது என்று தேயிலை பறிக்கும் பணியை விவசாயிகள் நிறுத்தி விட்டனர்.

தேயிலை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளில் அதிக தேயிலை தேக்கம் அடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை தொழிற்சாலைகள் இன்று முதல் மூடப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்தால் தொழிற்சாலை ஊழியர்கள், லாரி டிரைவர்கள் உள்பட பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை வரை 50 லட்சம் கிலோ தேயிலை தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறினர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top