கழிவுநீர் தொட்டியில் விஷவாயு கசிவு-துப்புரவுத் தொழிலாளர்கள் நான்கு பேர் பலி

 

pdam

புது டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கசிந்த விஷவாயு தாக்கி நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.

 

புது டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கிட்டோர்னி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து , அடைப்பை நீக்கும் பணியில் இன்று 5 துப்புரவு தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,காலை சுமார் 11 மணியளவில் தொட்டியில் இருந்து திடீர் என விஷவாயு கசிவு ஏற்பட்டது. அவர்கள் மூச்சுத்திணறி தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். அவர்களில் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலியானதாகவும் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top