மத்திய அரசிடம் தமிழக அரசு பிச்சை எடுப்பதா?- மாநில உரிமைகளை மத்திய அரசு பறிகிறது; தம்பிதுரை

 

aiadmk-mp

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நல்லதலல் என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

சமீபத்தில் உயர்நீதிமன்றம் தமிழக அரசு மருத்துவ கல்வி சேர்க்கைக்கு அளித்திருந்த 85 சதவிகித ஒதுக்கீட்டை  ரத்து செய்தது.   இது தொடர்பாக கோவையில் இன்று  செய்தியாளர்களிடம் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை  கூறுகையில்,”நீட் தேர்வில் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றாகிவிட்டது. ஒரே தேசம் ஒரே வரி என்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டியிலும் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டு விட்டது. பிறகு தமிழ்நாடு என்ன மத்திய அரசிடம் பிச்சை எடுப்பதா?

முன்னதாகவே பல திட்டங்களுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வராமல் அவதிப்படுகிறோம். பல்வேறு விவகாரங்கள் குறித்து கடிதம் எழுதியும் பதில் இல்லை. மீண்டும் மீண்டும் மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன. அது நல்லதல்ல” என்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top