வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஐ கடந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே காசிரங்கா தேசிய பூங்காவில் சிக்கித் தவிக்கும் வன விலங்குகளை மீட்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தின் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவுவதால் வடகிழக்கு மாநிலங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top