11-வது நாளாக கடையடைப்பு; கதிராமங்கலம் மக்கள் பொதுஇடத்தில் விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் எதிர்ப்பு

 

kathi_

 

‘சமையல் காஸ் பயன்படுத்துவதால் தான், ஓஎன்ஜிசி நிறுவனம் காஸ் எடுப்பதாக கூறுகிறார்கள். எனவே, சமையல் காஸ் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். நாங்கள் முன்புபோல, விறகு அடுப்பிலேயே சமைத்துக் கொள்கிறோம்’ என்று கூறி, அய்யனார் கோயில் அருகே விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர்

 

கதிராமங்கலம் கிராம மக்கள், சமையல் காஸ் அடுப்பை புறக்கணித்து பொதுஇடத்தில் விறகு அடுப்பு மூலம் சமைத்து உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும். இதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்ட 10 பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி அவ்வூர் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து, நேற்று கதிரா மங்கலம் கிராம மக்கள் அய்யனார் கோயில் முன் ஒன்று கூடினர். அப்போது, ‘சமையல் காஸ் பயன் படுத்துவதால் தான், ஓஎன்ஜிசி நிறுவனம் காஸ் எடுப்பதாக கூறுகிறார்கள். எனவே, சமையல் காஸ் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். நாங்கள் முன்புபோல, விறகு அடுப்பிலேயே சமைத்துக் கொள்கிறோம்’ என்று கூறி, அய்யனார் கோயில் அருகே விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர். இந்த நூதனப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில், கிராமத்தில் நேற்று 11-வது நாளாக கடை யடைப்பு நடைபெற்றது. கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அழைப்பை ஏற்று தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை, திருவிடைமருதூர், சோழபுரம், பந்தநல்லூர், தத்து வாஞ்சேரி, அணைக்கரை, திருப்பனந்தாள் மற்றும் நாகை மாவட்டம் திருவாலங்காடு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

 

கும்பகோணத்தில், வர்த்தகர் சங்கம், வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. மக்கள் சேவை இயக்கத்தினர் நேற்று கதிராமங்கலம் வந்தனர். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வாயிலில் 2-ம் ஆண்டு தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவிகள் வாயில் கருப்புத் துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top