பெண்கள் விரோத மத்திய அரசு! சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி!

download

சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. நடைமுறையில் 12 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக எதிர்ப்பு வந்தும் நாப்கினுக்கான வரியை பூஜ்ய சதவீதமாக குறைக்க முடியாது என்றும் மறுத்துள்ளது மத்திய அரசு

மத்திய அரசு சானிட்டரி நாப்கினை அழகு சாதன பொருட்களுடன் சேர்த்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதற்கும்  அழகு சாதனமாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாமலா இந்த அரசு இருக்கிறது!  .மட்டுமின்றி 12 சதவீத வரியை நியாயப்படுத்தும் படி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது அதில்  “முன்பு, அதன் மீது 5 சதவீத உற்பத்தி வரி, 6 சதவீத மதிப்பு கூட்டு வரி மற்றும் கூடுதல் வரிகள் சேர்த்து, 13.7 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, 12 சதவீதமாக வரி விகிதம் குறைந்துள்ளது’’. என்று கூறுகிறது

மத்திய அரசு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை அலசி ஆராயாமல் கண்மூடித்தனமாக ஒரு உண்மையற்ற அறிக்கையை கொடுப்பது வாடிக்கையாக போய்விட்டது. உதாரணமாக “ஏழைகள் தினசரி சாப்பிடும் கடலைமிட்டாய் க்கு 18 சதவீதமும்  மத்தியதரவர்க்கமும் பணக்காரர்களும்  தினசரி  சாப்பிடும் பீட்சாவுக்கு 5 சதவிதமும் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது உங்கள் ஆட்சி  யாருக்கானது என்பதை காட்டுகிறது’’ என்று கேள்வி கேட்டவர்களிடம்  ஊடகங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசும் போது மக்களின் கேள்வி முறைமையை புரிந்துகொள்ளாமல் “அது அப்படிதான் உங்களுக்கு பாஜக அரசை குறைசொல்வதே வழக்கமாகிவிட்டது” என்று தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் உடல்மொழியோடு  பதில் சொல்வது இந்த அரசு ஏழைகளுக்கானது அல்ல என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.இப்போது இது பெண்களுக்கு எதிரனதுமாக இருக்கிறது என்பதை காணமுடிகிறது.

மத்திய அரசு சொல்வதுபோல் உண்மை அவ்வாறு இல்லை இப்போது ஜிஎஸ்டி 12 சதவீதமும், நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு 30 சதவித வரியை செலுத்தவேண்டியதிருக்கிறது.  நாப்கின் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டபோது   மத்திய நிதி அமைச்சகம் நாப்கினுக்கான வரியை பூஜ்ய சதவீதமாக குறைக்க முடியாது என்றும் மறுத்துள்ளது.

ஆரம்பத்தில் கல்விக்கும் ,சுகாதாரத்திற்கும் வரி விலக்கு இருக்கும் என்று மத்திய அரசு சொல்லிவந்தது.  ‘ஜிஎஸ்டி’ வந்த பிறகுதான் தெரிகிறது பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் சுகாதாரத்திற்குள் வாறாது என்பது! வயதுக்கு வந்த பெண்களில் வெறும்  12  சதவீத பெண்களே சானிடரி நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. மீதமுள்ள பெண்கள் குறிப்பாக 88 சதவிகிதம் பழைய துணிகளையும் மாற்று பொருட்களையுமே பயன்படுத்துகிறார்கள்.அவ்வாறு பயன்படுத்துவதனால் தொற்று நோய்க்கு அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ  அறிக்கை சொல்கிறது.

சுகாதாரமின்மை காரணமாகக் தொற்று நோய்க்கு ஆட்பட்டு கர்ப்பப்பாதையை சிதைத்து மகப்பேறினைப் பாதிக்கும் குறைபாடுகள் எனத் தொடங்கி கருப்பை புற்றுநோய்வரைக்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தொற்றுநோய் அதிக உதிரபோக்கையும் ஏற்படுத்தி பெண்களுக்கு ரத்தசோகை நோயை உருவாக்குகிறது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அலட்சியம்தான் பெரும்நோய்களை உருவாக்கி நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.ஆகையால் மத்திய அரசு  இந்த விசயத்தில் முரண்டு பிடிக்காமல் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சானிடரி நாப்கின் களுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்கி உத்தரவு இடவேண்டும்

சேவற்கொடியோன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top