கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி எழும்பூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முற்றுகை

kathira

 

கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி எழும்பூரில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவர் முன்னணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதில் மோதல் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் எழும்பூரில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவர் முன்னணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மண்டல நிர்வாகியான தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 10 பெண்கள் உள்பட 40 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top