அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஐ.நாவில் ஒப்பந்தம்

un

ஐநா சபையில் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை விவாதித்து வந்த மாநாட்டின் தலைவரான கோமேஸ் முடிவுகளை ஐநா சபையில் கலந்து கொண்ட நாடுகளிடம் அறிவித்தார்.

“அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்த விதை விதைத்துள்ளோம்..இதன் மூலம் எங்கள் குழந்தைகள் அணு ஆயுதமற்ற உலகை வரித்துக்கொள்ளூம் சாத்தியம் ஏற்பட்டுள்ளது” என்றார் கோமேஸ்.

இந்த சட்ட நெறிமுறைக்காக உலகம் 70 ஆண்டுகளாக காத்திருந்தது என்றார் கோமேஸ். உலகின் முதல் அணுகுண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி மீது வீசப்பட்டதிலிருந்து இதற்காக காத்திருந்ததாக அவர் கூறினார்.

ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டப் போது 13 வயது ஆகியிருந்த செட்சுகோ துர்லோ என்பவர் அத்தாக்குதலிலிருந்து பிழைத்தவர்கள் இன்னொரு முறை எந்தவொரு மனிதர்களும் அத்தகைய அட்டூழியத்திற்கு ஆளாகக்கூடாது என்று வாழ்நாள் முழுதும் உழைத்ததாக கூறினார்.

அணு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச பிரச்சார குழுவில் ஒருவரான பீட்ரைஸ் ஃபிஹின் கூறுகையில் ” நாம் 45 வருடங்களுக்கு முன்னரே உயிரியல் ஆயுதங்களை தடைசெய்துலோம், நாம் 25 வருடங்களுக்கு முன்னரே ரசாயன ஆயுதங்களை தடைசெய்துலோம், மற்றும் இன்று நாம் அணு ஆயுதங்களை தடைசெய்ய உளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறியப்பட்டுள்ள ஒன்பது நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆதரிக்கவில்லை. அவற்றின் கூட்டணி நாடுகளும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.

அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்சின் ஐநா பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளாக விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். அவர்கள் அறிக்கை ஒன்றில், “சர்வதேச பாதுகாப்பு சூழலின் யதார்த்தினை இந்த ஒப்பந்தம் தெளிவாக மதிப்பிடவில்லை என்றும், அணு ஆயுத விலக்கம் என்ற கொள்கையுடன் இணைந்ததாக இல்லை என்றும், கடந்த 70 ஆண்டுகளாக அணு ஆயுத விலக்கம் ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் அமைதி நிலவ அவசியமாக இருந்ததாகவும் தெரிவித்தன. இந்த ஒப்பந்தம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எந்தவித தீர்வையும் தரவில்லை எனவும், அதே போல அணு ஆயுத விலக்கலை அவசியமாக்கும் இதர பாதுகாப்பு சவால்களையும் இது அணுகவில்லை என்றும் அவை கூறின.

இந்த ஒப்பந்தம் ஒரு அணு ஆயுதத்தையும் ஒழிக்க இயலாது என்றும், எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் அது அதிகரிக்காது எனவும் அவை சுட்டிக்காட்டின. எதிர்மாறாக உலகம் ஆபத்துகளை சந்திக்கும் போது இந்த ஒப்பந்தம் அவற்றின் மத்தியில் பிளவை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கை விவரித்தது.

மாறாக கடந்த ஐம்பதாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மூன்று நாடுகளும் கோரின.

அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஐந்து துவக்ககால அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவற்றை கடந்து அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்கும் நோக்கம் கொண்டது. இந்த ஒப்பந்தம் அணு ஆயுதமற்ற நாடுகள் அதைத் தயாரிக்காமல் இருக்கவும், அமைதியான முறையில் அணுமின்சாரம் தயாரிக்கவும் ஒப்புக்கொள்ளச் செய்யும் நோக்கம் கொண்டது.
மாறாக கடந்த ஐம்பதாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் முடிவு உலக நாடுகள் இடையில் சிறு பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏன் என்றால் இந்த ஐந்து நாடுகளும் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான அணு ஆயுதத்தை கொண்டு தான் இந்நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றன. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த போவதாகவோ அல்லது ஒழிக்கப்போவதாகவோ இந்நாடுகள் தெரிவிக்கவில்லை மாறாக பிற நாடுகளிடம் இந்த அணு ஆயுத உற்பத்தி முறை பரவுவதை தடுக்க வேண்டும் என்று கூறுகின்றன, ஆதலால் அணு ஆயுதத்தின் மூலம் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை அச்சுறுத்தி தான் கீழ் கொண்டுவந்து அந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்தை தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும், அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டும் நாடுகளுடன் அப்பிராந்திய உலா மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அந்நாடுகளிடம் அணு ஆயுத உற்பத்திக்கான பொருளாதாரமோ அல்லது தொழில் நுட்பமோ கிடையாது இதை பயன் படுத்தி எங்கு அணு ஆயுத தாடையில் இருந்து வெளியேறிய நாடுகள் தங்களை தாக்குமோ என்ற அச்சம் பரவலா உலக நாடுகளிடம் காணப்படுகிறது.

உலக அரங்கில் அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுப்பெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top