இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடல் பகுதியில் இன்று நடக்கிறது.

INS Shivalik + I

 

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று (ஜூலை 7) முதல் 11 நாட்கள் நடக்கிறது.

 

கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய – அமெரிக்க கடற்படைகள் இணைந்து ‘மலபார்’ கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா – அமெரிக்கா ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சியில் கடந்த 2007-ம் ஆண்டு ஜப்பான் முதல்முறையாக பங்கேற்றது. கடந்த 2015-ம் ஆண்டு ஜப்பான் இந்த கூட்டுப் பயிற்சியில் நிரந்தரமாக இணைந்தது.

 

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென் சீன கடல் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆண்டு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெற உள்ளது.

 

நடப்பாண்டுக்கான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் ‘மலபார்’ கூட்டுப் பயிற்சி ஜூலை 7-ம் தேதி முதல் முதல் 17-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

 

இதில், துறைமுகம் மற்றும் கடல் பகுதி என இரண்டு இடங்களிலும் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின்போது, ஒவ்வொரு நாட்டின் போர்க்கப்பல்களின் செயல்பாடுகள், நீர்மூழ்கிக் கப்பல் தடுப்புப் போர் பயிற்சி, வான் வெளித் தாக்குதலை எதிர்கொள் வது, படகு ரோந்து மூலம் கடல் எல்லையில் அத்துமீறி நுழைபவர் களைப் பிடிப்பது, கடலில் மூழ்கு பவர்களைத் தேடுவது, மீட்பது உட்பட பல்வேறு பயிற்சிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் போர்க் கப்பல்கள், கண்காணிப்பு விமானங்கள் கலந்துகொள்கின்றன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top