ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ரஷியா எதிர்ப்பு

 

rasya

 

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

 

ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் செயல்படுவதாக  அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹூவாசாங்–14 என்னும் அதிநவீன ஏவுகணையை ஜப்பானின் கடல் பகுதியில் வடகொரியா வெற்றிகரமாக செலுத்தியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 6,700 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும்.

 

அதாவது அமெரிக்காவையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும். தனது நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்த சோதனை நடத்தப்பட்டதால் அமெரிக்கா சீற்றம் அடைந்து இருக்கிறது.. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க–தென்கொரிய ராணுவம் கூட்டாக ஏவுகணை சோதனை நடத்தின. இதற்கிடையே ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்டியது. வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

 

ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹெலே பேசுகையில், வடகொரியா ஐசிபிஎம் ஏவுகணைகளை பரிசோதனை செய்தது தெளிவாகி உள்ளது, இது ராணுவ விரிவாக்கமாகும். வரும் நாட்களில் நாங்கள் பாதுகாப்பு கவுன்சில் முன்னதாக புதிய தடைகளை கொண்டுவருவோம்.

 

அமெரிக்கா தன்னையும், தன்னுடைய கூட்டணி நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள முழு படை பலத்தையும் பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளது. முடியாத கட்டத்தில் எங்களுடைய படை பலத்தை நாங்கள் பயன்படுத்துவோம். ஆனால் அத்தகையை திசையை நோக்கி செல்லக்கூடாது என்றே நாங்கள் தயராகி வருகிறோம் என்றார்.

 

வடகொரியாவிற்கு எதிராக வர்த்தக தடைகளை தீவிரப்படுத்த அமெரிக்கா தன்னுடைய நகர்வை முன்னெடுத்து உள்ளது.

 

இதற்கிடையே வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடை மற்றும் ராணுவ நடவடிக்கையை ரஷியா எதிர்த்து உள்ளது.

வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடை மற்றும் ராணுவ நடவடிக்கையானது அனுமதிக்க முடியாதது என ரஷியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்து உள்ளது. வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதன் மூலம் பிரச்சனைகளை சரிசெய்ய முடியாது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் ரஷியாவின் துணை தூதர் விளாடிமீர் சாப்ரோன்காவ் பேசிள்ளார். பிரச்சனையை தீர்ப்பில் நாம் மிகவும் அதிகமான வேகம் காட்டுகிறோம் என கூறிஉள்ளார்.

 

வடகொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் எந்தஒரு முயற்சியும் ஏற்றுக் கொள்ள முடியாதது என ரஷியா கூறிவிட்டது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top