திருமுருகன் காந்தி கைது பற்றி சட்டசபையில் கேள்வி; முதல்வர் விளக்கம்!

 

thiru

மே 21, 2017 அன்று தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது கடற்கரையிலிருந்து 34 தோழர்களை தனி வாகனத்தில் ஏற்றிச் சென்றது காவல்துறை. அதில் 17 தோழர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன், மற்றும் அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தை ஏவியது

 

தமிழக அரசின் இந்த அராஜக நடவடிக்கை அனைத்து தரப்பினரத்திடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்கள் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் இதுகுறித்து ஆகஸ்ட் 3 தேதிக்குள்  பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறது

 

இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் திருமுருகன் காந்தி அங்கு போராட்டம் நடத்தினார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் காவல்துறையினர் திருமுருகன் காந்தியை கைது செய்ததாகவும் கூறினார்.

 

கடந்த ஆறு ஆண்டுகளாக  எந்த சட்ட ஒழுங்கு  பிரச்சனையும் இன்றி நினைவேந்தல் நடந்துக்கொண்டுயிருக்கும் போது திடீரென அந்த பகுதியை இந்த ஆண்டு தடை செய்வது பொருத்தமற்ற செயல் மற்றுமின்றி  அன்று காலையில்  ஹிந்து பத்திரிகை நடத்தும் ஒரு விழாவுக்கு  அனுமதி கொடுத்து இருந்ததும் எப்படி நியாயம் ஆகும்? தடை என்றால்  எல்லோருக்கும் தடையாகதானே இருக்கவேண்டும்!. இதையெல்லாம் ஆராயாமல் ஒரு முதல்வர் சட்டசபையில் போலிஸ்  சொல்லும் காரணத்தை அப்படியே சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல!  என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

 

இவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும், போலியான ஆவணங்கள் மற்றும் வழக்குகள் மூலமாக இந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டதற்காக அளிக்கப்பட்ட சான்றாவணத்தில் இருக்கும் பொய்களை எடுத்துக் காட்டி, இந்த நான்கு தோழர்களும் மக்களுக்காக தொடர்ந்து போராடி வந்த காரணத்தால் அரசியல் பழிவாங்கல் நோக்கங்களுக்காக இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதாகவும் அறிவுரை குழுமத்தில் பங்கேற்று தமது வாதத்தை முன்வைத்த அறிஞர்களும் கூறுகிறார்கள் .

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் பொறுப்பற்ற பதிலாக இருக்கிறது என்று மக்கள் முகநூலில் விமர்ச்சனம் செய்கிறார்கள்

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட டிடிவி தினகரனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி மேலும் படிக்க

Your email address will not be published.

Scroll To Top