தமிழக சட்டசபையை இன்று ஓய்வு பெற்ற போலீசார் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்

retired-police-arres

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வ அழகன் தலைமையில் தலைமைச் செயலக வளாகத்தை இன்று 20க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்தினர் முற்றுகையிட்டார்கள்

 

இன்று சட்டசபையில் காவல் துறை மானியக்கோரிக்கை நடைபெறுவதால் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல போலீசாரின் குடும்பத்தினரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

தலைமைச் செயலக வளாகத்தை இன்று காவலர்கள் குடும்பத்தினர் முற்றுகையிடுவார்கள் என்ற உளவுத்துறை தகவலை அடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் தாண்டி, ஓய்வு பெற்ற காவல்துறையினர் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கூடி முழக்கம் எழுப்பினர்

 

போராட்டக்காரர்களை போலீசார் பிடித்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாரின் குடும்பத்தார் போராட்டத்தில் குதிக்க இருந்த தகவல் போஸ்டர்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் முன்கூட்டியே தெரியவந்ததால், சட்டசபை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வ அழகன் பேட்டியளித்தபோது,

 

 

*8 மணி நேர வேலைக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். தினமும் இதைவிட கூடுதலாக பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். காவலர்களின் மனம், உடல் ஆரோக்கியத்திற்கு இது அவசியம்.

 

*மற்ற அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்க வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழக போலீசாருக்கு ஊதியம் குறைவு.

 

* காவல்துறையிலுள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனால், பணிச்சுமை குறையும்.

 

*உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் ஆர்டர்லி முறையை ரத்து செய்து, சுய மரியாதையோடு போலீசாரை வாழ விட வேண்டும்.

 

*வார விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பிற அரசு ஊழியர்களுக்கெல்லாம் விடுப்பு எடுப்பது சாதாரண விஷயம்.

* காவலர்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு வசதியாக போலீஸ் நலச் சங்கம் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வைத்துள்ளனர்.

 

* இரவு நேர பணி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகலில் வேலை பார்ப்பவரையே இரவும் வேலை பார்க்க வைப்பது கூடாது. இதில் சுழற்சி முறைதேவை. இவையெல்லாம் போலீசாரின் முக்கிய கோரிக்கைகளாகும்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top