திருமுருகன்,டைசன் உட்பட நான்குபேர் மீதான குண்டர் சட்டம்;பதில்அளிக்க உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு

three

 

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நினைவுகூர்ந்து வந்த நிலையில்,  கடந்த 21-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறை திடீரென  நினைவேந்தலை நடத்தக்கூடாது என்று தடை விதித்தது. நினைவேந்தல் நடத்த வந்த  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் டைசன், இளமாறன், அருண் குமார் ஆகிய நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது

 

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு என்றும் அதை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து இந்த மனுவை பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் சென்னை காவல் துறை ஆணையர் மற்றும் உள்துறை செயலர்  ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top