பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

Narendra_Modi-770x433

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி.

முதற்கட்டமாக, போர்ச்சுக்கல் செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் அந்தோணியா கோஸ்டாவைச்சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒத்துழைப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஒத்துழைப்பு போன்ற விவரங்களை பேச உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க பயணத்தின் போது பேச்சுவார்த்தை நடத்துகிறார்.பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் இந்தியா-அமெரிக்கா உறவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இப்பயணம் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர், அமைச்சர்கள் மட்டும் இன்றி அந்நாட்டு பெரும் தொழில் அதிபர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, பிரதமர் மோடி 27-ம் தேதி, நெதர்லாந்து செல்கிறார்.
70 ஆண்டுகாலம் டச்சுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட இந்தியாவுக்கு 2017 ஒரு முக்கியமான ஆண்டாக குறிக்கப்படுகிறது.நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 வது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும் உலகளவில் 5 வது பெரிய முதலீட்டு பங்காளியாகவும் உள்ளது.

நெதர்லாந்து நீர் மற்றும் கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போன்ற துறைகளில் உள்ள டச்சு நிபுணத்துவம், நமது வளர்ச்சிக்கான தேவைகள்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் சுமூகமான உறவு பேணப்படுவது மட்டுமல்லாமல், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top