கீழடி அகழாய்வு குறித்து சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது

main-qimg-abb77aec117fccbc6ceb6438f925fb96-c

கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு குறித்த கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வு தமிழர்களின் நாகரிகத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகமுக்கியமான இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஏற்பாடு செய் யப்பட்ட இதில் எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளருமான சு.வெங்க டேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ. சாந்தலிங்கம், பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சு.வெங்க டேசன் பேசியதாவது:

தமிழகத்தில் வரலாற்று நகரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஒரே இடம் கீழடி மட்டும்தான். இது போன்ற நகரம் ஐரோப்பிய நாடுகளில் இருந்திருந்தால், அதனை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியிருப்பார்கள்.

இந்தியாவில் 1 லட்சம் கல் வெட்டுகள் உள்ளன. அதில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியை மட்டுமே சார்ந்தவை. வைகை நதிக் கரையில் இவை அதிகம் காணப்படுகின்றன. அந்த நதிக் கரையில் உள்ள 293 கிராமங்கள் வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்தவையாக உள் ளன. அகழாய்வு பணிகளை தொடர அந்த இடத்தை அரசு கையகப் படுத்த வேண்டும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top