ஏழு தமிழர் விடுதலை குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

IN10_NIRMALA_SITHA_2144019g

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது சட்ட நுணுக்கம், மனித உரிமைகள் மீறல் தொடர்புடையது என்பதால் மத்திய, மாநில அரசுகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

திருச்சி,

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்க செய்யப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு ஏற்றதா, ஏற்றுக்கொள்ளவில்லையா என்பது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம்தான் கேட்க வேண்டும். எய்ம்ஸ் அமைவிடம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்காத நிலையில், நான் எதுவும் கூற முடியாது. இந்த விஷயத்தில் மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கிப்பட்டியில் தான் அமைக்கவேண்டும் என ஒரு சாராரும், மதுரையில் தான் அமைக்கவேண்டும் என இன்னொரு சாராரும் கேட்டு அதற்கான அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதுபோன்ற பல காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படவேண்டும் என்பதை தமிழக அரசு, இதற்காக அமைக்கப்பட்ட தொழில் நுட்ப குழு ஆகியவற்றுடன் கலந்து பேசி மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும்.

நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல நிலைகளில், பல கோணங் களில் நீதிமன்றம் மூலம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த ராபர்ட் பயாஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்து இருப்பதால் தன்னை கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் மனு கொடுத்து இருப்பதாகவும், தமிழக சட்டசபையில் இதுபற்றி விவாதம் நடத்தப்பட்டதாகவும், இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி கேட்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது சட்ட நுணுக்கம், மனித உரிமைகள் மீறல் தொடர்புடையது என்பதால் மத்திய, மாநில அரசுகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top