சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

 

karanan1_

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக மறைவாக இருந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டார்.விமானம் மூலமாக டெல்லி அழைத்து சென்றார்கள்

, “நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டதில் பல்வேறு உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இதனால் அவரை விடுவிக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் கர்ணன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், கர்ணன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

விடுமுறை காலம் முடிந்து நீதிமன்றம் முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன் சிறப்பு அமர்வே இது குறித்து முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாமீன் வழங்கமுடியாது என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top