மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜாகவின் குரலாய் ஒலித்த முதல்வர் பதில்- ஆதரவு எம் எல் ஏக்கள் வெளிநடப்பு.

இன்று ஜுன் 2௦ ஆம் தேதி சட்டப்பேரவையில் மாட்டிறைச்சி விவகாரம் பற்றி அதிமுகவின் கூட்டணி கட்சி உறுப்பினர்களான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் தனித்தனியாக தனிநபர் தீர்மானம் கொடுத்திருந்தனர்.

1497942463இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.

அவர், ‘’மத்திய அரசின் மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் உத்தரவு பற்றி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டம் 4௦ ஆண்டுகளாக அமலில் இருக்கிறது.தமிழக  அரசு  இந்த விவகாரத்தில் பெரும்பாலான மக்களின் உணர்வுகள் அடிப்படையில் செயல்படும்’’ என்றார்.

இந்த பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அதிமுகவின் கூட்டணி கட்சி உறுப்பினர்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மாடுகளை வளர்க்கும் விவசாயிகளின் வருமானத்தை தடுக்க மத்திய அரசு முயல்கிறது என கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ தனியரசு குறினார்.

யார் என்ன உணவு உண்ணவேண்டும் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது சாலையோர கையேந்தி பவனில் மாட்டிறைச்சி உண்டவன் நான்…
ஏழை குடும்பங்களின் அன்றாட உணவாக இருக்கக்கூடிய மாட்டிறைச்சியை தடுப்பது மக்களின் உணவு உரிமைக்கு எதிரானது.  என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top