“நரகாசூரன்” ஃபஸ்ட் லுக் போஸ்டர் – இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு இன்று மற்றும் ஒரு பெரிய நாளாக அமைந்துள்ளது. துருவங்கள் பதினான்று வெற்றிக்கு பின்னர் கார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவரின் இரண்டாவது படமான “நரகாசூரன்”   ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

19225614_446691125696427_7442040195153366251_n

நரகாசூரன் படத்திற்கான தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகளின் பெயர்களை படக்குழு போஸ்டரில் அறிவித்துள்ளது. அரவிந்த் சுவாமி கதாநாயகனாகவும், இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது, ரான் யோஹன் இசை அமைக்கிறார்.

படம் குறித்து கார்த்திக் நரேன் தன் ட்விட்டர் பக்கத்தில் “டார்க் அண்ட் எமோஷனல்லி இன்டென்ஸ் சஸ்பென்ஸ் ட்ராமா” படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதும் மட்டும் இன்றி படத்தின் போஸ்டரில் “the tale of a fallen demon” எனும் வாசகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top