ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.
Anbanavan-Asaradhavan-Adangadhavan-Movie-Poster
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த படத்திற்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. யுவன் இசையமைத்துள்ள படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படமான “த்ரிஷா இல்லனா நயந்தாரா” தமிழ் ரசிகர்களுக்கு இடையே பெரிதும் பேசப்பட்ட படமாக இருந்தது. ஒரு தரப்பு ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் இனொரு தரப்பு ரசிகர்களுக்கு சர்ச்சைக்குரிய படமாகவும் பார்க்கப்பட்டது கரணம் அந்த படத்தின் கதையமைப்பு, பெண்களுக்கு எதிரான ஆண் ஆதிக்கத்தை நியாயப்படுத்தி எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்க பட இருப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது.
இதில் 3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. அதில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய தோற்றங்கள் மட்டுமே முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதர தோற்றங்களில் உள்ள கதாபாத்திரத்தை வைத்து 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முதல் பாகத்தின், இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. தணிக்கைக்கு இணையம் வழியாக பார்க்கக் கோரியதால் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆகையால், ஜூன் 23-ம் தேதி வெளியாகுமா என்ற குழப்பம் விநியோகஸ்தர்கள் மத்தியில் நீடித்து வந்தது.
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியதால் வெளியீட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது. தற்போது ஜூன் 23-ம் வெளியீடு என்பதால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top