தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளும் கட்சி எம்எல்ஏ சட்டசபையிலிருந்து வெளிநடப்பு!

 

thangatamilselvan-admk

 

தமிழக சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு செய்தார். இது சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்வது  இதுவே முதல் முறை ஆகும்.

 

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த கடந்த 14-ஆம் தேதி சபை கூடியது. முதல் நாளிலேயே கூவத்தூர் பேரம் குறித்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. எனினும் சபாநாயகர் தனபால் அந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கவில்லை. மேலும் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார். இந்த விவகாரத்தால் அமளி ஏற்பட்டு   திமுக வெளியேற்றப்பட்டதும் , அதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததும் நடைபெற்றது.
இந்த நிலையில் உயர் கல்வித் துறை, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றன. பள்ளிக் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை இன்று சட்டசபையில் நடைபெற்றது.

மேலும் சுகாதாரத் துறை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குமாறு தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ-வுமான தங்கதமிழ் செல்வன் கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் தங்கதமிழ் செல்வன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

 

சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்வது இதுதான் முதல்முறையாகும். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top