பிரான்ஸ் தேர்தலில் இளம் அதிபர் மக்ரோனின் கட்சி அபார வெற்றி

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் இளம் அதிபரான இம்மானுவேல் மக்ரோனின் “ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி” அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸில் முதலில் அதிபர் தேர்தலிலும் , பின்னர் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் 39 வயதான மக்ரோன் பிரான்ஸின் இளம் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் பிரான்ஸின் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களில் நடைப்பெறும் . முதல் கட்ட தேர்தலில் 50 சதவீத்ததுக்கு மேல் வேட்பாளர் வாக்கு பெறவில்லை எனில் முதன்மை இடங்களை பிடித்த வேட்பாளர்களிடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுப்படுவார்கள் .

577 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 11-ம் தேதி நடைப்பெற்றது. இந்த தேர்தலில் இளம் அதிபர் மக்ரோனின் கட்சியே முன்னிலை வகித்தது. இந்தநிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைப்பெற்றது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டனர்.

மொத்த உள்ள 577 நாடாளுமன்ற தொகுதிகளில் 355 முதல் 425 இடங்கள் வரை இளம் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கட்சியான ரிப்பளிக் ஆன் தீ மூவ் வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி அடைந்துள்ளது.

பிரான்ஸ் வரலாற்றில் தீவிர அரசியல்வாதி இல்லாத மக்ரோன் கட்சி துவங்கிய ஒரே ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். பிரான்ஸ் இளம் அதிபரின் இந்த வெற்றி உலகளவில் இளைஞர் அரசியல் எழுச்சி பெறுவதற்கான முன்னுதாரணம் என்று அரசியல் விமசகர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top