தமிழக முதல்வர், தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு

 

 

edappadi-kKSF--

ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

பிரசாரத்தின் போது, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 அமைச்சர்கள் மற்றும் அந்த தொகுதியில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top