குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

365266-mohan-bhagwat

வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவருடன் ஆர் எஸ் எஸ் தலைவரின் சந்திப்பு இந்தியா அரசியல் வட்டாரங்களில் பல வியூகங்களை தூண்டியுள்ளது.

இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது தான் என்று குடியரசு மாளிகை மற்றும் ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தலைவர் மோகன் பாகவத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா மற்றும் சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று பாகவத் கூறியுள்ளார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது மாளிகையில் நேற்று அளித்த விருந்தில் மோகன் பாகவத் பங்கேற்றார்.இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே தவிர எந்த ஒரு கொள்கை முடிவுகளோ, அரசியல் பேச்சுகளோ நிகழவில்லை என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top